நவீன உபகரணங்களினால் ஏற்படும் பாதிப்புகள்



             செல்போன், டேப்லெட் திரைகளைத்  தொடர்ந்து  பார்பதால் கண்ணுக்குப் பாதிப்பு ஏற்படும் என்பது பெரும்பாலானோருக்கு தெரியும். ஆனால், எந்த  அளவுக்கு பாதிப்பு இருக்கும் என்பது தெளிவாகத்  தெரியாததால், ஏதோ நம்பிக்கையில் இஷ்டம்போல் பயன்படுத்திக்கொண்டிருக்கிறோம்.

               அண்மையில்  டொலெடோ பல்கலைக்கழகத்தில் ( The University of Toledo) நிகழ்த்தப்பட்ட ஓா் ஆய்வில் , இன்றைய தொலைபேசிகள், தொடுகணினிகள்  மற்றும் தொலைக்காட்சிகளின் திரைகள் வெளிவிடும் நீல வெளிச்சம், கண்ணின் ஒளி நுண்ணுணா்வுள்ள செல்களில் நச்சு மூலக்கூறுகளை  உருவாக்கலாம், கண் பார்வையை  பாதிக்கலாம் என்று  கண்டறியப்பட்டுள்ளது. இதன் பொருள், இந்தத் திரைகளைத் தொடர்ந்து நெடுநேரம் பார்த்தால், பலவிதமான கண் பிரச்சனைகள் ஏற்படக்கூடும் என்பதுதான். சில  செல்போன் தயாரிப்பாளர்கள் Blue Light Filter எனப்படும் வடிகட்டித் தொழில்நுட்பங்களைப் பயன்படுத்துகிறார்கள். ஆனால், பெரும்பாலான திரைகளில் இந்த வசதி இன்னும் வரவில்லை. ஆகவே, இயன்றவரை  இவற்றின்  பயன்பாட்டைக் குறைத்துக்கொள்வதுதான் பார்வைக்கு நல்லது.

Comments